“என் கவிதை விமர்சனம்: தமிழ் கவிதைக்கு என் தொண்டு” என்னும் இந்த வலைப்பூவின் தலைப்பைப் பார்த்தால் வலைப்பூவின் நோக்கம் புரியும். சிறப்பான தமிழ் கவிதைகளைப் பிரபலமாக்குவது இந்த வலைப்பூவைத் தொடங்கியதன் உத்தேசம்.

“கவிதை விமர்சனம்” என்பதற்கு பதிலாக “என் கவிதை விமர்சனம்”. ஆக, எனக்குப் பிடித்த கவிதைகள் மட்டும்தான் இதில் இடம் பெறுகின்றன. எனக்குப் பிடிக்காத கவிதைகளை, எனக்குப் புரியவில்லை என்று கருதி, இலக்கிய அறிவு மேலும் வளர்ந்த பிறகு படிக்கலாம் என்று எதிர்காலத்திற்கு தள்ளிவிடுகிறேன்.

நீங்கள் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதி அனுப்பினால், அது என் கணிப்பில் தரமானதாக இருந்தால் உங்கள் பெயரில் வெளியிடுவேன். தேவையிருப்பின் அதன் சில பகுதிகள் நீக்கப்பட்டு மாற்றியும் அமைக்கப் படலாம்.

என்னைத் தொடர்பு கொள்ள dogratamil@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Advertisements
Posted in Uncategorized | Leave a comment