ஒரு பெண்ணின் இதயம்

ஊடல் என்ற கவிதையைப் படித்தேன். ஒரு பெண்ணின் இதய உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுவதோடு மட்டும் இல்லாமல் சில இலக்கிய நுட்பங்கள் இருக்கின்றன இந்தக் கவிதையில்.

அளவுக்கு அதிகமான உன்
அன்பை இன்று ஆக்ரோஷமாய்
வெளிக்காட்டினாய்…

‘அளவுக்கு அதிகமான’ அன்பை ‘இன்று’ அவன் ‘ஆக்ரோஷமாய் வெளிக்காட்டினார்’. ஆக, காதலியைப் பொறுத்தமட்டில் காதலனின் ஆக்ரோஷமும் அன்பின் ஒரு வெளிப்பாடுதான். ஆனாலும், இப்படிப்பட்ட வெளிப்பாடு வழக்கமானது அல்ல. ‘இன்று’ என்ற வார்த்தை இந்த வெளிப்பாடு அரிதானது என்பதைக் காட்டுகிறது. அதனால்தான், காதலி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள்.

அவசியம் நீ பேசச் சொல்லியும்
அவசரமாய் விலகி நின்றேன்…

‘அவசியம் …. அவசரமாய்’ என்ற வார்த்தைகள் ஒலி பயன்பாட்டின் மூலம் அவன் அவசியம் பேசச் சொல்வதையும் அவள் அவசரமாய் விலகுவதையும் முரண்பாடு காட்டி அவனது ஆண்மை நிறைந்த கோபத்தில் ஆணை-தன்மை மற்றும் அவளது தயக்கத்தில் பெண்களுக்குரிய அச்சம் இருப்பதாகக் காணகிறோம் .

என் கண்ணில் நீர் வழிந்தால்
உன் நெஞ்சம் ரணமாகும்

ரணமும் ஒருவித தண்ணீர் விடுவதால், இந்த இலக்கிய படிமமும் பொருத்தமாக இருக்கிறது.

உன் நெஞ்சம் வேதனை கொண்டால்
உயிர் வரை என்னைச் சுடுவதென்ன….
உடனே வந்தோடி எனை நீ
உணரும் வண்ணம்
நான் அணைப்பதென்ன…

‘எனை நீ உணரும் வண்ணம்’ என்பது ஒரு அழகான sensual image. (‘sensual’ என்பதற்கு பொருத்தமான தமிழ் வார்த்தைத் தெரிந்தால் சொல்லுங்கள்.)

விலகல் எவ்வளவு துன்பமானது என்பதை காதலியின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன:

அத்தனையும் மறந்து விட்டு
நம் அன்பில் மட்டும்
மலர்ந்து நிற்போம்
இக்கணமே இவ்விடமே
ஒன்றாகக் கலந்திருப்போம்…!!

மொத்தத்தில், சில அழகான இலக்கிய படிமங்களும், உணர்வுகள் நிறைந்த சில சொற்றொடர்களும் கொண்டுள்ள ஒரு சிற்ப்பு மிக்க கவிதை.

Advertisements

6 Responses to ஒரு பெண்ணின் இதயம்

 1. Ananthi says:

  எனக்கு என்ன சொல்வதென்றே…தெரிய வில்லை.. நீங்கள் ரசித்து, படித்ததோடு மட்டும் அல்லாமல்… அதை அழகாக விமர்சித்திருப்பது… ரொம்ப சந்தோசங்க.. நன்றி.. :-)))

 2. dogrask says:

  ஆனந்தி, நல்ல கவிதைகளைப் படித்து ரசிப்பதோடு மட்டும் இல்லாமல் அவற்றின் சிறப்பம்சங்களை எடுததுரைத்து மற்ற வாசகர்களும் அவற்றை ரசிக்க உதவுவது ஒரு ஆர்வமுள்ள வாசகனின் கடமை.

 3. கவிதையின் ஒவ்வொரு சிறு பகுதியினையும் அழகாக பகுத்து அதன் உணர்வுகளோடு ஒத்து நோக்கி சீரிய அளவில் விமர்சனம் செய்துள்ளீர்கள். sensual image என்பதற்கு சிற்றின்ப படிமம் என்றும் சொல்லலாம் அல்லவா…

 4. dogrask says:

  நன்றி நீலா அவர்களே.

  ஆங்கில இலக்கிய விமர்சனத்தில் sensuous, sensual, sexual என்ற மூன்று தனித்தனி வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். Sensuous image என்ற வார்த்தைக்கு ‘புலனுணர்வு படிமம்’ என்றும், sensual image என்ற வார்த்தைக்கு ‘புலனின்பப் படிமம்’ என்றும், sexual image என்ற வார்த்தைக்கு ‘காமுணர்வு படிமம்’ என்பது சரியான வார்த்தைகளாக இருக்குமா?

  நீங்கள் சொன்ன ‘சிற்றின்பப் படிமம்’ என்ற வார்த்தையையே சற்று மாற்றியமைத்துள்ளேன்.

 5. dogrask says:

  நீலா,
  நான் ‘புலனின்பமான’ என்ற ஒரு புதிய வார்த்தையை Wictionary யிலும் சேர்த்துவிட்டேன்.

 6. நன்றிகள். இவ்வாறு புதுப் புது வார்த்தைகளை தமிழில் பயன்படுத்துகிற போது நிச்சயமாக அது மொழிக்கு நல்ல வளம் கொடுக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s