கவிதை விமர்சனம் – 1

கீழ் கண்ட கவிதைகளை eluthu.com என்ற இணையத்தளத்தில் படித்தேன்:

மணிகண்டன் மகாலிங்கம் எழுதிய மூன்று கவிதைகள் எனக்குப் பிடித்தன. “விரித்து வைக்கப்பட்ட குடைகள்….” என்ற கவிதையில் அவர் சொல்கிறார்:

கோடையிலும்
விரித்து
வைக்கப்பட்ட குடைகள்….
மரங்களின் இலைகள்….

ஒரு கவிதை நாம் தினமும் சந்திக்கும் நிகழ்வுகளை வித்தியாசமாக விவரிப்பதன் மூலம் அவற்றுக்கு வேறுபட்ட மற்றும் விரிவான அர்த்தத்தை வழங்குகிறது. Hiddenness, Uncertainty, Surprise: Three Generative Energies of Poetry என்ற புத்தகத்தில் ஜேன் ஹர்ஷ்ஃபீல்ட என்பவர் எவ்வாறு ஒரு கவிதை வார்த்தைகளில் மறைக்கப்பட்ட அர்த்தங்கள், தெளிவின்மை மற்றும் அர்த்தத்தில் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் நம் மனதை கவருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

குடைகள் மழைக்காலத்தில் பயன்படுத்தப்படுவதால், “கோடையிலும் குடைகள்” என்ற வித்தியாசமான கூற்று நம் கவனத்தை ஈர்த்து கவிஞர் அடுத்ததாக என்னச் சொல்லப் போகிறார் என்பதை காத்திருக்க செய்கிறது. மேற்கொணடு படிக்கும்போது அந்த குடைகள் சாதாரண குடைகள் அல்ல என்பதை அறிகிறோம். மரங்களே குடைகளாக மாறுகின்றன.

இந்த வித்தியாசமான இரண்டு அர்த்தங்களுடன் சேர்ந்த மரங்களின் நமக்கு நன்மை தரும் தன்மையும் கவிதையின் அர்த்தத்தை விரிவுபடுத்துகிறது.

இன்னொரு கவிதையில் மணிகண்டன் இவ்வாறு எழுதியுள்ளார்:

சுருக்கினால்
திரித்த கயிறாகும்…..
விரித்தால் குடையாகும்…
கறுத்த கூந்தல்….

இந்த சிறிய கவிதை துணுக்கில் கூந்தல் குடை போல விரிவாவது மனதை கவரும் ஒரு படிமத்தை கண்ணுக்கு முன் கொணர்ந்து நிறுத்துகிறது. அத்துடன் சுருக்கும் போது ஒரு தூக்கு கயிறு போலவும், விரியும் போது ஒரு நிழல் கொடுக்கும் குடை போலவும் கூந்தல் இருப்பது அவற்றுக்கு சொல்லாமலேயே சூசகமாகன அர்த்தத்தை வழங்குகின்றன. இன்னும் சிந்திக்க தொடங்கினால், கயிறு கட்டுப்படுத்துகிறது, குடை சற்று சுதந்திரமாகவே விட்டுவிடுகிறது. நம் சமுதாயத்தில் பாரம்பரியமாக இருக்கும் பெண்கள் கூந்தலை பொதுவாக பின்னுவதாலும், நவீன கலாச்சாரத்தை பின்பற்றும் ஆண்களுடன் சுதந்திரமாக பழகும் பெண்கள் கூந்தலை அதிகளவு கட்டாமல் விட்டுவிடுவதாலும், கயிறுடனும் குடையுடனும் ஒப்பிடுவது இன்னொரு அர்த்தத்தையும் வழங்குகிறது.

ஒரு நல்ல கவிதையின் குணம் என்னவென்றால் அதை மீண்டும் மீண்டும் படிக்கும் போது அதனிடத்து முதல் முறை படித்த போது நம் மனதிற்கு தோன்றாத பல கருத்துக்கள் வெளிப்படும்.

இன்னொரு கவிதையில் அவர் சொல்கிறார்:

வரைந்த
அன்றே
அழிக்கப்படும் ஓவியங்கள்….
மாக்கோலங்கள்….

பொதுவாக நாம் ஒரு காரியத்தை செய்யும் போது அதை பிறகு அழிப்பதற்காக செய்வதில்லை. ஆனால் கோலம் போடும்போது அதை அன்றிரவே அழிக்கப் போகிறோம் என்பதை தெறிந்தே வரைகிறோம். நம் மனதிற்கு சாதாரணமாக வராத இந்த எண்ணத்தை கூறுவதன் மூலம் இக்கவிதை நம் எதிர்பார்ப்பை ஏமாற்றி நம் மனதை கவருகிறது. அத்துடன் எத்தனையோ அழகான பொருட்கள் சிரமப்பட்டு மிக சிறிய நேரத்துக்கே செய்யப்படுவதை நினைவு கொள்ளவும் செய்கிறது.

வேதகிரி என்பவர் ஒரு கவிதையில் இவ்வாறு இழுதியுள்ளார்:

யார் கொடுத்த வரமோ…..
நீ சூடும் பூக்களுக்கு! – அது
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உன்னோடு
வாழ்ந்துவிடுகிறது!

கவியின் பொறாமை, சொல்லாமலேயே காதலியின் அழகு-குணம், அவளோடு ஒரு நாள் கழிப்பது எவ்வளவு மிக்கியத்துவம் வாய்ந்தது, அவ்வாறு செய்ய வரம் பெற்றிருக்க வேண்டும், பூவின் வாழ்க்கை சுருக்கமாக இருந்தாலும் அந்த ஒரு நாள் வாழ்க்கையில் அது பூரிப்பு அடைகிறது — ஆகிய எண்ணங்களை கவிஞர் ஐந்து சின்ன சின்ன வரிகளில் சிப்பமிட்டுள்ளார்.

ச.இமலாதித்தன் என்பவரின் “கற்பு” என்னும் கவிதை வேறொரு வகையில் சிறப்புப் பெறுகிறது:

நகரத்துக் காட்டானின்
காமக் காட்டாற்று
வெறியாட்டத்தில்
பறிபோனது
தெருவோரம்
குப்பை பொறுக்கும்
சிறுமியின் கற்பு…!

சூழ்ச்சி செய்யும்
சூட்சமக்காரர்களால்
சூழப்பட்டுள்ள இந்த
சமுதாயத்தில்
இவன்போன்ற
சந்தர்ப்பவாதிகளின்
அற்ப சந்தோசங்களுக்காக
இங்கே சந்திசிரிக்கிறது கற்பு…!

இதுபோல்
சமுதாயத்தின் மீதுள்ள
நம்பிக்கைகளும்
பலநேரங்களில்
சூறையாடப்படுவதால்
சூழ்நிலைக் கைதியாய்
கற்பிழந்து நிற்கின்றது
மானுடம்…!

பல்லிழித்து
பகல்வேசம் போடுகின்ற
பணத்திற்காக
பள்ளிப்பருவத்திலேயே
வீதிக்கு வரவழைத்த
வறுமைபோன்ற
சமுதாயப் பிழைகளை
இல்லாதழிக்க
ஒருமித்த குரலாய்
ஒன்றிணைவோம்
மானிடனாய்…!

இக்கவிதையில் அனைத்தும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்பட்டிருந்தாலும், வார்த்தைகளை அடுக்கும் விதம் கவிதைக்கு அழகும் அதன் அர்த்தத்துக்கு பலமும் வழங்குகின்றது.

முதல் மூன்று வரிகளில் “காட்டானின்”, “காட்டாற்று” மற்றும் “வெறியாட்டத்தில்” என்ற வார்த்தைகளில் “ஆட்டு-ஆட்டு-ஆட்டு” என்று திரும்ப திரும்ப ஒலித்து குற்றவாளியை பற்றிய இம்மூன்று வார்த்தைகளையும் நம் மனதில் இணைக்க உதவுகிறது. அதே நேரத்தில் “ட்ட” என்ற ஒலி முரட்டுத்தனத்தை பிரதிபலிக்கிறது.

இரண்டாவது பத்தியில் “அற்ப” மற்றும் “கற்பு” ஆகிய வார்த்தைகளின் ஒலி-ஒப்பம் குற்றவாளியையும் அவர் செயலினால் பாதிக்கப்பட்டவரையும் ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வைக்கிறது.

இதே போல இக்கவிதையில் பல இடங்களில் வார்த்தைகள் தேர்வு மிக நன்றாக இருக்கிறது.

Advertisements

5 Responses to கவிதை விமர்சனம் – 1

 1. Ananthi says:

  வாவ்.. இந்த ஒப்பீடும் நல்லா இருக்குங்க.. நீங்கள் குறிப்பிட்டது போல், வார்த்தை தேர்வுகள்.. அருமை..

  சமூக அவலத்திற்கு எழுதப்பட்ட சாட்டையடி கவிதை..

  பகிர்வுக்கு நன்றி.. 🙂

  ~அன்புடன் ஆனந்தி

 2. நல்ல விமர்சனம். தொடரட்டும் பணி!
  கலைமகன் பைரூஸ்

 3. dogrask says:

  நன்றி கலைமகன் அவர்களே.

 4. எனது கிறுக்கல் பற்றிய உங்களது விமர்சனம் என்னை இன்னும் உந்துதல் படுத்தியது.நன்றி.

  http://www.tamilvaasal.blogspot.com

 5. dogrask says:

  சிறந்த சிந்தனைகள் கொண்டுள்ள இலக்கியத்தை உருவாக்கி வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுவது சமூக சேவை என்று நம்புபவன் நான். உங்கள் கவிதை சிந்திக்கத் தூண்டும் தன்மை கொண்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s